இப்போதெல்லாம் கொஞ்சம் அரசர் கால கதைகளாகவோ, அல்லது பிரம்மாண்ட உருவாக்கமாகவோ இருப்பின் உடனே பாகுபலி படத்துடன் ஒப்பிடும் போக்கு ட்ரெண்டாகிவிட்டது. இப்படித்தான் பாயும் புலி என சொல்லும் போதெல்லாம் பாகுபலி என கேட்கிறது என அப்படத்தின் விழாவில் லிங்குசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் பலரும் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி, வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ள புலி படத்தின் பிரம்மாண்ட மேக்கிங்காலும், அரசர் கால கதை போல் இருப்பதாலும் படத்தைப் பலரும் பாகுபலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.