டி.ராஜேந்தரின் ஆவேசப் பேச்சு!!......ஓடிச்சென்று தடுத்த விஜய்!!

சென்னை: புலி ஆடியோ விழாவில் பெரும் உருக்கமான காட்சிகள் நேற்று அரங்கேறின. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் நடிகர் விஜய்யைப் புகழ்ந்து, உருகி, கண்ணீர் மல்கப் பேசப் பேச அதைப் பார்த்து விட்டு பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த விஜய் துள்ளி ஓடி மேடைக்குச் சென்று ராஜேந்தரைக் கட்டிப்பிடித்து அணைத்து அவரை அமைதிப்படுத்தினார். புலி ஆடியோ வெளியீடு நேற்று மாலை பிரமாண்டமாக மகாபலிபுரத்தில் நடந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே பாடல்கள் குறித்த விவரங்கள் வெளியாகி விட்டன இணையதளத்தில். புலி ஆடியோ விழாவில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா, இயக்குநர் சிம்பு தேவன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் உள்ளிட்டோரும், சிறப்பு விருந்தினர்களாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, விஜய் சேதுபதி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.